குடிபோதையில் கைதி ஒருவர் செய்த காரியம்!! விசாரணைக்கு உத்தரவு
பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் குடிபோதையில் கைதி ஒருவர் விடுத்த கொலை மிரட்டல் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் பணிப்புரையின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையின் உயர் அதிகாரி ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் குறித்த கைதிக்கு மது அருந்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின், பல்லேகலையில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலை அதிகாரிகளை கைதி மிரட்டியுள்ளார்.
கைதி மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, தும்பர சிறைச்சாலையில் இருந்து புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று பல்லேகல சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு மதுபோதையில் இருந்த கைதி தும்பர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் பணிப்புரையின் பிரகாரம், பந்தனார உயர் அதிகாரிகள் பலரின் தலைமையில் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
சம்பவம் தொடர்பில் ஏற்கனவே மதுபோதையில் இருந்த கைதிகள் மற்றும் பல சிறை அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிக்கு மதுபானம் வழங்கிய அதிகாரி தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மதுபானம் வழங்கிய அதிகாரி மீது பதவி வேறுபாடின்றி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர் குடிபோதையில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ”
களு புத்தா” என அழைக்கப்படும் இவர் கண்டியில் போதைப்பொருள் வியாபாரி எனவும் சிறைச்சாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.