பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களை தண்டிக்க வழி
தற்போதைய நிதி நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக எந்தவொரு நபரும் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி சங்கித வீரரத்ன தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
கொழும்பு ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த முடிவின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்யலாம் என்று கூறினார்.
இது தொடர்பில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி சங்கித்த வீரரத்ன கருத்துத் தெரிவித்தார்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அத்துலசிறி சமரகோன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போதைய நிதி நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் பொது விவாதம் நடத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களே பொறுப்பு என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்தது.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன உள்ளிட்டோர் அந்த அடிப்படை உரிமை மனுக்களை சமர்ப்பித்திருந்தனர்.
இது தொடர்பில் இன்று பாராளுமன்றத்திலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.