இலவசமாக சக்தி வாய்ந்த கண்ணாடியை மேயர் மகாலட்சுமி வழங்கினார்
காஞ்சிபுரம் தனியார் பள்ளியில் ரோட்டரி கிளப் சார்பில் 250க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக சக்தி வாய்ந்த கண்ணாடியை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் வழங்கினர்.
காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி கிளப் மற்றும் பம்மல் சங்கர நேத்ராலாயா இணைந்து காஞ்சிபுரம் ஓரிக்கை பாரதிதாசன் மேல்நிலை பள்ளி வளாகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 8 நாட்கள் கண் சிகிச்சை சிறப்பு முகாமை நடத்தினார்.
இம்முகாமில் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். கஜேந்திரகுமார் தலைமையிலான குழுவினர் 1,300க்கும் மேற்பட்ட பொதுமக்களின் கண்களை பரிசோதித்தனர்.
இப்பள்ளி வளாகத்திலேயே மருத்துவமனையி சிறப்பு அறுவை சிகிச்சை வாகனத்திலேயே 150நபர்களுக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்தனர்.
மேலும் 245நபர்களை மேல் கிசிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பங்குபெற்ற அனைவருக்கும் உணவு, தங்குமிடம் ,அறுவை சிகிச்சை கட்டணம் என அனைத்தும் இலவசமாக செய்யது தரப்பட்டது.
மேலும் கண் புரை அறுவை சிகிச்சை மேற்கொண்ட அனைவருக்கும் மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்பட்டது.
சிகிச்சையில் 250க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கிட்ட மட்டும் தூர பார்வை குறைபாடு உள்ள வயதானவர்களுக்கு இலவசமாக சக்தி வாய்ந்த கண்ணாடியை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சி பெயர் மகாலட்சுமி யுவராஜ் பொது மக்களுக்கு சக்திவாய்ந்த கண்ணாடியை வழங்கினார்
இதன் நிறைவு விழா இன்று பள்ளி வளாகத்தில் உள்ள அருண்ஆனந்த் அரங்கத்தில் நடைபெற்றது. ரோட்டரி கிளப் கிழக்கு தலைவர் G.முருகேஷ், செயலாளர்R.கமலேஷ் மற்றும் பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் இம்முகாமில் கலந்து கொண்டனர்.
பல ஆயிரம் கட்டணம் செலுத்தி இதுபோன்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருந்த தங்களுக்கு ரோட்டரி கிளப் மற்றும் தனியார் கண் மருத்துவமனை சிறப்பான சேவை செய்ததை வாழ்நாளில் மறக்க இயலாது என பங்கு பெற்றவர்கள் தெரிவித்தனர்.