இலங்கை

இலங்கையில் அடுத்த வருடத்தில் (2024) பல பொருட்களின் விலைகள் 72 சதவீதம் உயரும் என அறிவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் விலை 72 சதவீதம் உயரும் என பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் அமிந்த மெத்சிலா தெரிவித்துள்ளார்.

இதன்படி மறைமுக வரிகள் காரணமாக  2024ஆம் ஆண்டில் பொருட்களின் விலை மற்றும் சேவைகளின் கட்டணங்கள் உள்ளிட்டவை கணிசமான அளவில் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்ட ஆவணத்தின்படி 122, 400 கோடி ரூபாய் (1224 பில்லியன்) கூடுதல் வருமானத்தை அரசு எதிர்பார்க்கிறது. அதில் 72 சதவீதம் வற் மற்றும் இதர கூடுதல் வரிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விதிக்கப்படும் போது,  ​​வணிகர்கள் வாடிக்கையாளரிடமிருந்து வரியை முழுமையாக வசூலிக்க முயற்சிப்பார்கள். அதன்படி இந்த 72 சதவீத மறைமுக வரி நுகர்வோர் மீது செலுத்தப்படுவது தவிர்க்க முடியாது என அமிந்த மெத்சில்வா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

(Visited 26 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!