பிரேசில் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த ரணில் விக்கிரமசிங்க
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க துபாயில் ஐக்கிய நாடுகள் சபையின் COP28 காலநிலை மாற்ற மாநாட்டையொட்டி பிரேசில் நாட்டு பிரதமர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுடன் முக்கிய சந்திப்பொன்றில் ஈடுபட்டார்.
இரு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்ற நெருக்கடியால் பகிரப்பட்ட சவால்களை விவாதம் எடுத்துக்காட்டியது.
இலங்கை மற்றும் பிரேசில் ஆகிய இரு நாடுகளுக்கும் ஏற்படும் இந்த கவலைகளை நிவர்த்தி செய்வதற்கும் தணிப்பதற்கும் டிராபிகல் பெல்ட் முன்முயற்சியின் மூலம் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பிரேசில் ஜனாதிபதிக்கு டிராபிகல் பெல்ட் முன்முயற்சியில் சேருமாறு ஜனாதிபதி விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தார்.
இலங்கைத் தலைவர் ஜனாதிபதி லுலா ட சில்வாவையும் தீவு நாட்டிற்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.
(Visited 4 times, 1 visits today)