இலங்கையில் இருந்து நாடு திரும்பவிருந்த சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த கதி

பாதுகாப்பற்ற ரயில் கடவையின் ஊடாக பயணித்த பேருந்து ஒன்று வஸ்காடு பகுதியில் ரயிலுடன் மோதியதில் இன்று அதிகாலை விபத்து ஏற்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று ரயிலுடன் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அளுத்கமவில் இருந்து ஹலவத்தை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் பேரூந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
செக் குடியரசு நோக்கிச் செல்லவிருந்த சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 12 times, 1 visits today)