கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு மற்றொரு சவால்
கோவிட் விதிகள் தளர்த்தப்பட்ட பிறகு முதல் குளிர்காலத்தில் சீனா மற்றொரு சவாலான காலகட்டத்தில் நுழைகிறது.
சீனாவில் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்ப்பது அதிகரித்து, அந்த குழந்தைகளில் பலர் சுவாச நோய்களால் போராடி வருகின்றனர்.
வட சீனாவின் முக்கிய நகரங்களில் உள்ள சில குழந்தைகள் மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக சில நோயாளிகள் வைத்தியரைப் பார்ப்பதற்கான முறை வரும் வரை நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெய்ஜிங் குழந்தைகள் மருத்துவமனையின் அதிகாரி ஒருவர், கடந்த செவ்வாய்கிழமை, மருத்துவமனையில் தினசரி சராசரி நோயாளிகளின் எண்ணிக்கை 7,000-க்கும் அதிகமாக உள்ளது என்று கூறினார்.
இது மருத்துவமனையின் கொள்ளளவை விட அதிகம் என்று கூறியுள்ளார்.
சீனாவின் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனையின் வெளிநோயாளர் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு கடந்த சனிக்கிழமை 13,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.