ஐரோப்பா

குளிர் காலத்திற்கு தயாராகும் நாடுகள் – அயல் நாடுகளின் உதவியை நாடும் உக்ரைன்

உலகளவில் குளிர்காலம் ஆரம்பிக்கும் நிலையில் உக்ரைனில் வெப்பநிலை குறையும் நிலையில் அது எரிசக்திப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளது.

ரஷ்யாவுடனான அதன் போர் தொடர்கிறது. இருக்கும் இடத்தில் சூட்டை அதிகரிக்கவேண்டும் என அதிகமானோர் கோருகின்றனர்.

ஆனால் தேவையைச் சமாளிக்கப் போதிய மின்சாரத்தைத் தன்னால் உற்பத்திசெய்ய முடியாது என்று கீவ் கூறுகிறது. பக்கத்து நாடுகளின் உதவியை அது நாடியுள்ளது.

குளிர்காலத்தில் மின்-ஆலைகள் நாலரை கிகாவாட்ஸ் மின்சக்தியை விநியோக்கும். போருக்கு முந்திய உற்பத்தியில் அது மூன்றில் ஒரு பங்கு என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறுகிறது.

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மின்கட்டமைப்பின் மீது மாஸ்கோ பெரிய தாக்குதல்களை விரைவில் மீண்டும் தொடங்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

அதனால் பிள்ளைகள் உட்பட மில்லியன் கணக்கானோர் மிதமிஞ்சிய குளிராலும் இருளாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!