இஸ்ரேலில் பணிபுரியச் செல்லும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு இராணுவப் பயிற்சி
இஸ்ரேலில் பணிபுரியச் செல்லும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு இராணுவப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றில் குற்றம் சுமத்தியுள்ளார்.
காஸா பகுதியில் மோதல்கள் ஆரம்பமானதில் இருந்து இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இலங்கையர்கள் நிலைகொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அதற்குப் பதிலளித்த தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்தார்.
இவ்வாறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக, இலங்கையர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுவதாகவும், அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளுக்கோ அல்லது போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கோ எந்தவொரு ஊழியரும் அனுப்பப்படமாட்டார்கள் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.