நைஜரின் இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் அப்துரஹமானே தியானி மாலிக்கு சென்றுள்ளார்!
நைஜரின் இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் அப்துரஹமானே தியானி நேற்றைய தினம் (23.11) மாலிக்கு பயணித்துள்ளார்.
ஜூலை மாதம் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் அவர் மேற்கொண்ட முதல் சர்வதேச பயணம் இதுவாகும்.
நைஜரின் அண்டை நாடுகளான மாலி மற்றும் புர்கினா பாசோ, முறையே 2020 மற்றும் 2022 இல் இராணுவத் தலைவர்களால் ஆளப்படுகின்றன.
மூன்று சஹேல் நாடுகளும் செப்டம்பர் மாதம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன, அதில் ஏதேனும் ஒரு நாட்டின் “இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு” மீது தாக்குதல் நடந்தால் பரஸ்பர பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து உள்ளடக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர. நைஜரை இராணுவம் கைப்பற்றிய பிறகு மேற்கத்தேய நாடுகள், பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனையடுத்து அந்நாட்டிற்கு கூட்டாளி நாடுகளான மாலி, மற்றும் புர்கினோ பசோ ஆகியவை ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு தியானி நன்றி கூறியுள்ளார்.