பாடசாலை மாணவர் ஒருவரை காணவில்லை

குருநாகலில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
குறித்த மாணவன் நேற்று முன்தினம் (16) பாடசாலைக்கு சென்றதாகவும், அதன் பின்னர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அனுராதபுரத்தில் வசிக்கும் 15 வயதுடைய மாணவன் எனவும், மாணவர் விடுதியில் தங்கியிருந்து கல்வியில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், குறித்த மாணவர் நேற்று (16) கொழும்பு அளுத்கடை பகுதியில் உள்ள ஒரு பக்க வீதியில் மற்றுமொரு நபருடன் பயணித்தமை சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் அனுராதபுரம், திபுல்வெவ மற்றும் குருநாகல் கட்டுபொத பொலிஸ் நிலையங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
(Visited 10 times, 1 visits today)