சர்வதேச குழந்தைகள் அமைதி பரிசை வென்ற உக்ரைன் யுவதிகள்
லண்டனில் நடந்த விழாவில், மூன்று உக்ரைன் யுவதிகளுக்கு இந்த ஆண்டுக்கான சர்வதேச குழந்தைகள் அமைதி பரிசு வழங்கப்பட்டது. போரில் இருந்து தப்பிச் சென்ற குழந்தைகளுக்கான செயலிகளை உருவாக்கியமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதுகள் முதன்முறையாக இங்கிலாந்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
அகதி குழந்தைகளுக்காக ஒரு செயலிகளை உருவாக்கியதற்காக சோபியா தெரேஷ்சென்கோ,அனஸ்டாசியா ஃபெஸ்கோவா,மற்றும் அனஸ்டாசியா டெம்செங்கோ ஆகியோருக்கு இந்த பரிசு வழங்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டில் ரஷ்யாவால் நாடு ஆக்கிரமிக்கப்பட்டபோது, மொபைல் செயலியை உருவாக்கும் திட்டத்தில் சோஃபியா தெரேஷ்செங்கோ, அனஸ்டாசியா ஃபெஸ்கோவா மற்றும் அனஸ்டாசியா டெம்சென்கோ ஆகியோர் இணைந்து பணியாற்றினர்.
உக்ரைனில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு தப்பிச் செல்லும் போது, தேவைப்படும் அகதிக் குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு தீர்வை உருவாக்க, அவர்கள் மொபைல் ஆப் திட்டத்தினை உருவாக்கியுள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் உரிமைகளுக்காக தைரியமாக போராடும் இளைஞர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளை சர்வதேச குழந்தைகள் அமைதி பரிசு எடுத்துக்காட்டுகிறது. முந்தைய வெற்றியாளர்களில் மலாலா யூசுப்சாய் மற்றும் கிரேட்டா துன்பெர்க் ஆகியோர் அடங்குவர்.