காசாவிற்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை எரிபொருளை விநியோகிக்க இஸ்ரேல் இணக்கம்!
வாஷிங்டனின் வேண்டுகோளின் பேரில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை 140,000 லிட்டர் எரிபொருளை காசா பகுதிக்கு வழங்க இஸ்ரேலின் போர் அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாளொன்றுக்கு இரண்டு எரிபொருள் கப்பல்கள் எல்லைக்குள் பிரவேசிப்பதற்கு இஸ்ரேல் முன்னர் இணங்கியிருந்ததாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்படி மனிதாபிமானப் பொருட்களை விநியோகிப்பதற்காக காசா பகுதிக்குள் நுழைவதற்கு உதவி நிறுவனங்கள் அதிக எரிபொருளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா. பாலஸ்தீன உதவி நிறுவனத்திற்கு ஒவ்வொரு 48 மணி நேரத்திற்கும் 120,000 லிட்டர் எரிபொருளை வழங்க இஸ்ரேல் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் மின்சாரம் தடைபடுவதை தடுக்கும் வகையில் மேலும் 20,000 லிட்டர் மின்சார தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
காசாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான பால்டெல் மற்றும் ஜவ்வால் ஆகியவை குறைந்த அளவிலான எரிபொருளை வழங்கிய பின்னர் தற்போது ஓரளவு தொலைத்தொடர்புகளை மீட்டெடுத்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.