இலங்கையின் கிரிக்கெட் நெருக்கடி குறித்து ஜெய் ஷாவுடன் ரணில் பேச்சு
இலங்கையில் ஏற்பட்டுள்ள கிரிக்கட் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவர் ஜெய் ஷாவுடன் சந்திப்பொன்றை நடத்தியதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வலது கரம் ஜெய் ஷாவின் தந்தை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, சர்வதேச கிரிக்கட் பேரவையினால் கிரிக்கட் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையினால் மைதான பராமரிப்பாளர்களுக்கு கூட சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் U-19 உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை இலங்கை இழக்க நேரிடும் என்று அவர் மேலும் கூறினார்.
(Visited 6 times, 1 visits today)