இஸ்ரேல் மற்றும் துருக்கிக்கு இடையில் ஏற்பட்டுள்ள கருத்து மோதல் : நெதன்யாகு கடும் கண்டனம்
“ஒரு நகரத்தையும், அதன் மக்களையும் முழுமையாக அழிக்கும் நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு என்பதை தெளிவாகவும், வெளிப்படையாகவும் கூறுகிறேன்” என்று துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும் காசாவில் கொடூரமான தாக்குதல்களை நடத்திய இஸ்ரேலின் அரசியல் மற்றும் ராணுவ தலைவர்கள் சர்வதேச நீதிமன்றில் நிச்சயம் விசாரிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
எர்டோகனின் பேச்சுக்கு இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“பயங்கரவாதத்தை ஆதரிக்கும் சில சக்திகள் இருக்கின்றன. குறிப்பாக துருக்கி அதிபர் எர்டோகன், இஸ்ரேலை பயங்கரவாத நாடு என்று கூறுகிறார். ஆனால் துருக்கி கிராமங்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார். இவர்களிடம் இருந்து எந்த அறிவுரையும் எங்களுக்கு தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.