ஜெர்மனியில் கடுமையாகும் சட்டம் – அகதி விண்ணப்பம் செய்தவர்களுக்கு நெருக்கடி
ஜெர்மனியில் அகதி விண்ணப்பம் செய்தவர்களுக்கு சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உச்சி மாநாட்டில் அகதிகள் விடயத்தில் கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த புதிய நடைமுறையின் படி நிராகரிக்கப்பட்ட அகதிகளை உடனடியாக நாடு கடத்துவதற்கு ஏற்பாடு செய்யும் வகையில் சில தீர்மானங்களை அவர்கள் எடுத்து இருந்தார்கள்.
இதன் அடிப்படையில் இவ்வாறு அகதி விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் காலமானது 3 மாதம் என்றும், இந்நிலையில் எவர் ஒருவரின் அகதி விண்ணப்பம் முற்றாக நிராகரிக்கப்பட்ட நிலையில் தொடர் அகதி விண்ணப்பங்களை மேற்கொள்கின்ற நடைமுறையும் புதிய சட்டத்தின் மூலம் இரத்து செய்யப்படும் என்றும் தெரியவந்து இருக்கின்றது.
இந்நிலையில் ஜெர்மனியின் பிரதான் எதிர்கட்சியான CDUCS கட்சியானது ஐரோப்பாவினுடைய வெளி எல்லை குறிப்பாக ஆப்பிரிக்காவில் வைத்து அகதிகள் விண்ணப்பத்தை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து இருந்தது.