இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடை!!! நான்கு லட்சம் பேர் வேலையிழப்பு
நான்கு வருடங்களாக இலங்கைக்குள் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாமையால் நுகர்வோர் மற்றும் இறக்குமதியாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக சிலோன் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
இதனால் 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் வாகன இறக்குமதிக்கு நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் கனவாகவே மாறியுள்ளது.
டொலர் கையிருப்பு ஓரளவு அதிகரித்துள்ள நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வசதியாக பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.