காசா பகுதியில் உள்ள ஒரு பெரிய வைத்தியசாலை முற்றாக முடக்கம்
இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் இடையே நேற்று முன்தினம் கடும் மோதல் ஏற்பட்டது.
வடக்கு காசா பகுதியில் அடிக்கடி மோதல்கள் நடந்து வரும் பின்னணியில் பாதுகாப்புத் தேடி பொதுமக்கள் இன்னமும் தெற்கு பகுதிக்கு சென்று வருகின்றனர்.
இதேவேளை, காசா பகுதியில் உள்ள பிரதான வைத்தியசாலையான அல்-ஷிஃபா வைத்தியசாலையின் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் பாதுகாப்புக் கோரி சுமார் 2,300 பொதுமக்கள் இன்னமும் அல்-ஷிஃபா வைத்தியசாலையில் தங்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹமாஸ் உறுப்பினர்களை மறைப்பதற்கும் முகாம்களை நடத்துவதற்கும் மருத்துவமனைகள் பயன்படுத்தப்படுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டிய போதிலும், மருத்துவமனை வளாகத்திற்குள் ஒரு பயங்கரவாதி கூட இல்லை என்று அல்-ஷிஃபா மருத்துவமனை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனிடையே, இஸ்ரேல்-ஹமாஸ் போர் மோதல்களால் 100க்கும் மேற்பட்ட ஐ.நா ஊழியர்கள் உயிரிழந்துள்ளதுடன், அவர்களுக்கு ஜெனிவா இரங்கல் தெரிவித்துள்ளது.