காணாமல் போனவர்களுக்கு விரைவில் இழப்பீடு – ஜனாதிபதி ரணில்
வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளக முரண்பாடுகள் முடிவுக்கு வந்தாலும் மீள்குடியேற்றப்படாத இடங்கள் இன்னும் இருப்பதாகவும், இதற்காக இரண்டாயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தின் நீர்ப் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கான அடிப்படை நடவடிக்கைகளுக்காக 250 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் உள்ளக முரண்பாடுகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில் தற்காக இரண்டாயிரம் ரூபா நிதி ஒதுக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நகர அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட உள்ளது.
இதேவேளை, பாலின அடிப்படையிலான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதுடன், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன், காணாமல் போனவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்காக மேலும் ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.