CWC – 5 விக்கெட்டு வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 42வது லீக் ஆட்டம் குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
ரஹ்மத் ஷா மற்றும் நூர் தலா 26 ரன்னும், குர்பாஸ் 25 ரன்னும் எடுத்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஓமர்சாய் பொறுப்புடன் ஆடி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகியது.
இதில், அதிகபட்சமாக ராசி வேன் டெர் துச்சன் 76 ரன்களை குவித்தார். தொடர்ந்து, டி காக் 41 ரன்கள், எய்டென் மார்க்ரம் 25 ரன்கள், டேவிட் மில்லர் 24 ரன்கள், டெம்பா பவுமா 23 ரன்கள், ஹெயின்ரிச் கிளென்சன் 10 ரன்களும் எடுத்தனர். இறுதியாக அன்டில் 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 47.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.