மாற்று பாலினத்தவர்களுக்கும் கத்தோலிக்க ஞானஸ்நானம்: வாடிகனின் எடுத்துள்ள முக்கிய முடிவு
கத்தோலிக்க ஞானஸ்நானத்தை மாற்று பாலினத்தவர்களும் பெறலாம் என வாடிகன் அறிவித்துள்ளது.
பிரேசில் நாட்டை சேர்ந்த பாதிரியார் ஜோசப் நெக்ரி என்பவர் மாற்று மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு திருச்சபையில் ஞானஸ்நானம் வழங்குதல் குறித்து கத்தோலிய கிறிஸ்துவர்களின் தலைமை இடமான வாடிகனுக்கு கடந்த ஜூலை மாதம் 6 கேள்விகளை உள்ளடக்கிய தொகுப்பை அனுப்பியுள்ளார்.
இதற்கு போப் பிரான்சிஸ் ஒப்புதலுடன் வாடிகனின் நம்பிக்கைக்கான கோட்பாட்டுத் துறை 3 பக்க கடிதத்தை பாதிரியார் ஜோசப் நெக்ரிக்கு அனுப்பி வைத்துள்ளது.அதில், மாற்று பாலினத்தவர் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு கத்தோலிக்க ஞானஸ்நானம் வழங்க வாடிகன் ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும் ஞானஸ்நானத்தின் போது அவர்களே ஞானப் பெற்றோர்களாக இருந்து, தமக்குத்தாமே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் உள்ளூர் பாதிரியார்களின் ஒப்புதலுடன் கிறிஸ்துவ திருமணங்களில் மாற்று மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் சாட்சியாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள LGBTQ ஆதரவாளர்கள் வாடிகனின் இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர், மேலும் இது மிகப்பெரிய மைல்கல் எனவும் அவர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்