அறிந்திருக்க வேண்டியவை கருத்து & பகுப்பாய்வு பொழுதுபோக்கு

ThugLife-ன் உண்மையான அர்த்தம் என்ன? இதோ விளக்கம்

36 ஆண்டுகளுக்கு பிறகு மணி ரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு ThugLife என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் அறிமுக வீடியோவையும் படக்குழு வெளியிட்டது. கமல்ஹாசனின் தோற்றம், சண்டை காட்சிகள், ஏ.ஆர் ரஹ்மானின் மிரட்டலான பின்னணி இசை, கமல் பேசும் வசனங்கள் என அனைத்தும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ThugLife-ன் உண்மையான அர்த்தம் என்ன? 

ThugLife என்பது தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக புழக்கத்தில் உள்ள வாரத்தை தான் என்றாலும், அதன் அர்த்தம் பலருக்கும் தெரியவில்லை.

ஒரு வாதத்திற்கு சரியான எதிர்வாதம் வைப்பது அல்லது கணிக்க முடியாத பதிலை அளிப்பது அல்லது சாதூர்ய நடவடிக்கை போன்றவற்றிற்கு ThugLife போட்டு மீம்ஸ்கள் உருவாக்கப்படுகின்றன.

ஆனால் ThugLife என்பது ரத்தக்கறை படிந்த வரலாற்றின் கருப்பு பக்கங்கள் என்பது பலரும் தெரியாது.

உண்மையில் Thug என்றால் திருடன், கொள்ளையன் என்று அர்த்தம். ஆங்கில வார்த்தையான Thug என்ற வார்த்தை வேர்ச்சொல் வடமொழியில் இருந்து வந்தது என்றும் சிலர் உருது மொழியில் இருந்து வந்தது என்று கூறுகின்றனர். 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் தான் இந்த வார்த்தை பரவலாக புழக்கத்திற்கு வந்தது.

1800களின் ஆரம்பத்தில், ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்த போது அவர்களை அலறவிட்டதும் இந்த ‘தக்கி’கள் தான்.

சாலையில் பயணிப்போரை, வெகு சாதாரணமாக கழுத்தை நெரித்து கொன்று, உடமைகளை கொள்ளையடித்த கொடூர கும்பல் ஒன்று நடமாடியதாக நம்பப்பட்டது. இவர்களை Thugs எனவும் ‘பிண்டாரிகள்’ எனவும்  ஆங்கிலேய அரசின் ஆவணங்கள் குறித்துள்ளன.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கொள்ளைத்தொழில் செய்தவர்கள் தான் இந்த தக்கிகள்.. இவர்கள் பெரும்பாலும் ராஜஸ்தான் மற்றும் அதனை சுற்றி இருந்த பகுதிகளில் வசித்து வந்தனர்.

Illustrations of the history and practices of the Thugs,  (1837) என்ற நூலில் “இந்தியாவில் ஏராளமான பரம்பரை தொழில்கள் உள்ளன. அதில் கொலை செய்து, கொள்ளையடிக்கும் மூர்க்க கும்பல் ஒன்று உள்ளது. இந்த Thugs காளியை வணங்குபவர்கள் என்பதும், ‘பிறவி குற்றவாளிகள்’ என்று சித்தரிக்கப்பட்டனர்.

Thugs-ன் மூர்க்கத்தனம் ஆங்கிலேயரை நடுங்க வைத்தது. இந்த கூட்டத்தை வேருடன் ஒழிக்கவில்லை எனில், இந்தியாவில் ‘கம்பெனி’யின் கொள்ளையை தொடரமுடியாது’ என 1830-ல் இங்கிலாந்துக்கு அறிக்கை  அனுப்பப்பட்டது.

உடனே, தக்குகளை அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியது ஆங்கிலேய அரசாங்கம்.

இவர்களை வேரோடு அழிக்கும்’ வேலையை, அப்போதைய பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் ‘லார்ட் வில்லியம் பெண்டின்க்’ மற்றும் ‘கேப்டன் வில்லியம் ஸ்லீமன்’ ஆகியோர் முன்னின்று செய்தனர். ஏறக்குறைய 4,000 தக் வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். சுமார் 2,000 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட நிலையில் மற்றவர்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.

கேப்டன் ஸ்லீமன் இந்தியாவில் ‘தக்’குகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக’ லண்டனுக்கு அறிக்கை சமர்ப்பித்தார். எனினும் சிலர் தப்பி ஓடி நாட்டின் பல இடங்களில் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது

பிலிப் மெடோஸ் டெய்லர் எழுதிய Confessions of a Thug-1839 என்ற பிரபலமான நூல் மூலம் “தக்” என்ற இந்திய வார்த்தை உலக வழக்கானது. ஆனால் இந்தியாவிலிருந்து ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு 50 வருடங்கள் கழித்து ஆங்கிலேயர்களுக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி.

1884-ம் ஆண்டு. முல்லைப் பெரியாறு அணை கட்டுமான பணிக்காக தேக்கடி வந்தார் மேஜர் ஜான் பென்னி குயிக், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் வாழ்ந்த வருச நாட்டு மறவர்களின் வாழ்க்கை, உயிருக்கு அஞ்சாத அவர்களின் நெறி மீறிய செயல்கள் இவற்றைக் கண்டு மிரண்டு. இதுகுறித்து நீண்ட பட்டியலிட்டு லண்டனுக்கு கடிதம் அனுப்பினார்.

‘வறுமையில் வாடி, பிழைப்புக்காக குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த இந்த இனத்தின் ‘தக்’ வாழ்க்கை மாற வேண்டுமானால் அந்த பகுதி வளம் பெறவேண்டும்’ என்பது அவர் கணித்திருந்தார். ‘அணை எழுப்பி, ஐந்து மாவட்ட செங்காட்டு தரிசு மண்ணை, வளமான விவசாய நிலங்களாக மாற்ற வேண்டும்’ என்பதுதான் அவரின் எண்ணம்.

அதையே தனது கடிதத்திலும் குறிப்பிட்டிருந்தார். அதன்பின்னரே முல்லைப்பெரியாறு அணை பல சிக்கல்களுக்கு பிறகு கட்டப்பட்டது.

எனவே, பின்விளைவுகள் பற்றி கவலைப்படாமல், எந்த சூழலிலும் பின்வாங்காமல், துணிவான அந்த கூட்டத்தை பயன்படுத்தப்பட்ட சொல் தான் Thug. இதுவே பிற்காலத்தில் எந்த கட்டுப்பாடும் இன்றி, எதைப்பற்றி கவலைப்படாமல் செய்யும் நினைத்தை செய்வோரை குறிக்கும் சொல்லாக Thug மாறியது.

இன்று சமூகவலைதளங்களில் ஜாலியாக, கேலியாக பயன்படுத்தப்படும் ThugLife என்ற சொல்லுக்கு பின்னால் இப்படிப்பட்ட கொடூர வரலாறு இருக்கிறது.

ஆனால் கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் ThugLife, எதை சொல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்

(Visited 12 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் உள் மையத்தின் ரகசியம் அம்பலம்!

பூமியின் உட்புறத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்போது மேலும் ஆழமாகவும், விரிவாகவும் கேட்கபடுகிறது. கேள்விகள் கேட்பதும் அதற்கான பதிலை தேடுவதும்
அறிந்திருக்க வேண்டியவை

ChatGPTக்குப் போட்டியாக Google எடுத்த அதிரடி நடவடிக்கை

Google நிறுவனம் ChatGPTக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் கலந்துரையாடல் செயலியை Google அறிமுகம் செய்யவுள்ளது.