ஐஸ்லாந்தில் பெண்களை திருமணம் செய்தால் பணம்? பரவும் தகவல் தொடர்பில் விளக்கம்

ஐஸ்லாந்து நாட்டில் கொஞ்சம் வித்தியாசமாக இந்த நாட்டில் உள்ள பெண்களைத் திருமணம் செய்துக்கொண்டால் 4.16 லட்சம் பணம் வழங்குவதாக தகவல் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.
சமீபத்தில், சமூக ஊடக தளமான Quora-வில் , ஐஸ்லாந்து நாட்டில் ஆண்கள் பற்றாக்குறையால் இங்குள்ள பெண்களைத் திருமணம் செய்யும் ஆண்களுக்கு அரசாங்கம் சுமார் 4.10 லட்ச ரூபாய் வழங்குவதாக செய்திகள் வைரலானது.
அதிலும் ஆப்பிரிக்க ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் இதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் இதன் உண்மைத் தன்மையை அறியாமல் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில் தற்போது இந்த செய்தி வைரலாகி வருகிறது.
ஐஸ்லாந்து நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள காரணத்தினால், அந்நாட்டு பெண்களை திருமணம் செய்துகொள்ளுவதற்கு பணம் தரப்படும் என்ற செய்தி வெளியானது.
இதையடுத்து தான் snopes.com என்ற உண்மைச் சரிபார்ப்பு இணையதளம் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு இந்த தகவல் முற்றுலும் பொய்யானது என்று நிரூபித்தனர்.