இலங்கை

நாளைய தினம் விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ள ஜனாதிபதி ரணில்

தேர்தல் முறை திருத்தம் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாக கொண்டு விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமையும் பட்சத்தில் எதிர்வரும் முதலாவது தேசிய தேர்தலை புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த முடியுமா என்பதை கண்டறியுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் ஜனாதிபதி இந்த ஆணைக்குழுவை நியமித்ததுடன், சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

அத்துடன், தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (8) பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட உள்ளார்.

புதிய முறைமை தொடர்பான வரைபை ஆறு மாத குறுகிய காலத்திற்குள் தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்