ஜெர்மனியில் அகதிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
ஜெர்மனியில் அகதிகள் அதிகரிப்பது தொடர்பாக பல அரசியல்வாதிகள் தங்களது கடுமையான கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள்.
ஜெர்மனியில் தொடர்ச்சியாக அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக FDP என்று அழைக்கப்படுகின்ற ஆளும் கூட்டு கட்சியில் இருக்கின்ற ஒரு பங்காளி கட்சியான இக் கட்சியுடைய தலைவர் லின் அவர்கள் அகதிகள் ஜெர்மன் நாட்டுக்கு வரும் பொழுது குறிப்பாக டப்ஸ்லிங் நாடுகளுடன் ஒப்பந்தத்துக்கு வரும் பொழுது சமூக உதவி பணத்தை வழங்க கூடாது என்ற கருத்தை முன்வைத்து இருக்கின்றார்.
இந்த கட்சியை சேர்ந்தவரும் தற்போதைய நீதிவானாக இருக்கும் புஷ் போன் அவர்களும் இவ்வாறான ஒரு கருத்தை பிரதிப்படுத்தி இருக்கின்றார். நோற்றின்பிஸ்பாலின் மாநில முதல்வர் அவர்கள் ஐரோப்பாவிற்கு வருகின்ற அகதிகளுக்கு ஐரோப்பாவின் எல்லைகளில் இருந்து அவர்களது அகதி விண்ணப்பங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று அவர் ஆலோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அதாவது மத்திய தரை கடல் ஊடாக வருகின்ற அகதிகளை வட ஆப்பிரிக்காவில் வைத்து அவருடைய அகதி விண்ணப்பங்களை பரிசீலனைப்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் முன்மொழிந்துள்ளார்.