ஏவுகணை பற்றாக்குறையுடன் போராடும் ரஷ்யா!
ரஷ்ய படைகள் துல்லியமான ஏவுகணை பற்றாக்குறையுடன் போராடுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் முக்கிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை ஏவுகணை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கியேவ், சைட்டோமிர், சபோரிஜியா மற்றும் ஒடேசா ஆகிய பகுதிகளில் 21 ட்ரோன்கள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டன. இதில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இலையுதிர்காலத்தில் நடந்த தாக்குதல் மிகவும் தீவிரமானவையாக இருந்தன என அமெரிக்காவைத் தளமாக கொண்ட ஆய்வுக்குழு ஒன்று தெரிவித்துள்ளது. இதன்போது அதிகளவில் வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது ரஷ்யா பற்றாக்குறையை சந்திக்கலாம் எனவும் விமர்சித்துள்ளனர்.