சிங்கப்பூரில் அறை ஒன்றை சோதனையிட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

சிங்கப்பூர் – புக்கிட் மேரா வியூவில் உள்ள வீடு ஒன்றில் நேற்று 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிங்கப்பூர் பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பிளாக் 117 புக்கிட் மேரா வியூவில் அமைந்துள்ள வீட்டில் நடந்துள்ளது.
அங்கு சடலம் கண்டெடுக்கப்பட்டகாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த மரணம், நேற்று நவம்பர் 4 ஆம் திகதி காலை 10 மணியளவில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
பொலிஸார் சம்பவ இடத்தை சுற்றி உள்ளதாகவும், விசாரணை செய்வதாகவும் ஷின் மின் கூறியுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(Visited 7 times, 1 visits today)