இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் பதவி விலகினார்!
 
																																		இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து, இலங்கை அணியின் எதிர்காலம் குறித்து கவலை எழுந்தது.
இதனையடுத்து விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க, தற்போதைய SLC நிர்வாகத்தை இராஜினாமா செய்யுமாறு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அணியின் வியூகம் மற்றும் தயாரிப்பு, அணித் தேர்வு, வீரர்களின் செயல்திறன் மற்றும் போட்டிக்குப் பிந்தைய பகுப்பாய்வு உள்ளிட்ட நான்கு குறிப்பிட்ட பகுதிகளை நிவர்த்தி செய்ய, SLC பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வாளர்களிடமிருந்து விளக்கம் கோரியுள்ளது.
(Visited 9 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
