ரஸ்யாவுடன் போர் : உக்ரைனில் ஜனாதிபதி தேர்தல்…!
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அடுத்த வசந்த காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதன் “நன்மை மற்றும் தீமைகளை” பரிசீலித்து வருவதாக அவரது வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அடுத்த இளவேனிற்காலத்தில் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரஸ்யாவுடன் போர் இடம்பெற்று வரும் நிலையில் தேர்தல் நடத்துவது பல்வேறு சவால்களை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
அடுத்த வசந்த காலத்தில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களும் யுத்தம் தொடங்கியதில் இருந்து நடைமுறையில் உள்ள இராணுவச் சட்டத்தின் கீழ் தொழில்நுட்ப ரீதியாக ரத்து செய்யப்படுகின்றன.
“இவ்வளவு பெரிய படையெடுப்பின் பின்னணியில் தேர்தலை நடத்துவது பற்றி பரிசீலிக்கும் வேறு எந்த நாடும் உலகில் இல்லை என்று நான் நினைக்கிறேன்,” என்று வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா ஒரு மாநாட்டில் கூறினார்.
வெளிநாட்டில் அதிக எண்ணிக்கையிலான உக்ரேனியர்கள் இருப்பதாலும், ராணுவ வீரர்கள் போர்முனையில் இருப்பதாலும் தேர்தல் நடத்துவது கடினம் என்று அவர் எச்சரித்தார்.
ரஷ்ய ட்ரோன்கள் அல்லது ஏவுகணைத் தாக்குதல்களுக்கு வாக்குச் சாவடிகள் “சரியான இலக்காக” மாறக்கூடும் என்று தான் அஞ்சுவதாகவும் குலேபா கூறினார்.
கடந்த மாதம் நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தலும் போர் காரணமாக ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.