புக்குஷிமா அணு ஆலையில் கழிவுநீர் மூன்றாம் கட்டமாக வெளியேற்றப்படும்!
ஜப்பானில் ஃபுக்குஷிமா அணு ஆலையிலிருந்து கழிவுநீரை வெளியேற்றும் 3ஆம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
7,800 டன் கழிவுநீர் வெளியேற்றப்படுவதாக ஆலையை நிர்வகிக்கும் TEPCO நிறுவனம் தெரிவித்தது.
கழிவுநீரை வெளியேற்றும் இந்த நடவடிக்கை 17 நாட்களில் முடிவுறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிறுவனம் AFP செய்தியிடம் கூறியது.
கடந்த ஆகஸ்ட் மாத இறுதியிலிருந்து கழிவுநீர் கட்டங்கட்டமாக வெளியேற்றப்படுகிறது. அடுத்த ஆண்டு (2024) மார்ச் மாதத்துக்குள் நாலாம் கட்ட வெளியேற்றத்தை மேற்கொள்ள TEPCO திட்டமிடுகிறது.
540 ஒலிம்பிக் நீச்சல்குளங்களில் நிரப்பக்கூடிய அளவுக்குக் கழிவுநீர் இருப்பதாக நிறுவனம் ஏற்கெனவே கூறியுள்ளது.
(Visited 4 times, 1 visits today)