ஜனாதிபதி ரணில் பயணித்த ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் வெலிமடை நோக்கி பயணித்த ஹெலிகொப்டர் மோசமான வானிலை காரணமாக வெல்லவாயவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பனிமூட்டமான காலநிலை காரணமாக ஹெலிகாப்டர் அதன் இலக்குக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், சுமார் ஒரு மணி நேரம் இருபது நிமிடங்கள் வான்வெளியில் சுற்றித் திரிந்த பின்னர், ஜனாதிபதி மற்றும் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்க விமானிகள் முடிவு செய்தனர்.
இதனையடுத்து வெள்ளவாய Buduruwagala படசாலை மைதானத்தில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது.
ஹெலிகொப்டர் பாடசாலை மைதானத்தில் தரையிறங்கியதும் ஜனாதிபதியை கண்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அங்கு வந்து ஹெலிகொப்டரை சுற்றி வளைத்து ஜனாதிபதியுடன் சிநேகபூர்வமாக கருத்துக்களை பரிமாறிக்கொண்டதாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சுற்றுப்புற கிராமம் மற்றும் பாடசாலையின் குறைபாடுகள் குறித்து பாடசாலையின் ஆசிரியர்கள் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியதுடன், அந்த விடயங்களை கவனத்தில் கொள்ளுமாறு ஜனாதிபதி அங்குள்ள செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
Buduruwagala பாடசாலையில் இருந்து மீண்டும் வேறொரு வாகனம் மூலம் செல்வதற்காக ஜனாதிபதி ஏறக்குறைய அரை மணிநேரம் காத்திருந்துள்ளார்.
கார் வந்ததையடுத்து, வெள்ளவாயில் இருந்து வெலமடைக்கு சாலை மார்க்கமாக ஜனாதிபதி புறப்பட்டுள்ளார்.