பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்குமாறு கோரிக்கை!

பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என போப் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதன் மூலமே அங்கு நடந்துவரும் போருக்கு முடிவு காண முடியும் என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
ஜெருசலேம் நகரம் தற்போது இஸ்ரேல் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில், ஐ.நா. நிர்வாகிக்கும் வகையில் அந்நகருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அடுத்த மாதம் துபாயில் நடைபெற உள்ள ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்க போவதாக தெரிவித்த போப், உலக வெப்பமையமாதலை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் தலைவர்களை வலியுறுத்த போவதாக தெரிவித்தார். ஐ.நா. காலநிலை மாநாட்டில் போப் ஒருவர் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.
(Visited 11 times, 1 visits today)