இஸ்ரேலின் அதிரடி நடவடிக்கை – தடுக்கும் தீவிர முயற்சியில் ஹமாஸ்

இஸ்ரேலிய படையினரின் டாங்கிகள் காஸா பகுதியின் தெற்கு மண்டலத்திற்குள் நுழைந்துள்ளமையினால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
காஸாவின் தெற்கு வலயத்திற்குள் 10க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய டாங்கிகள் நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், ஹமாஸின் ஆயுதப் பிரிவு இஸ்ரேலிய டாங்கிகள் தெற்குப் பகுதிக்கு செல்வதைத் தடுக்க ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.
காஸா நகருக்கு தெற்கே அமைந்துள்ள வைத்தியசாலைக்கு அருகில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
(Visited 5 times, 1 visits today)