இலங்கை

கொழும்பின் பலப் பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தல நீர் விநியோகத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆற்றலைச் சேமிக்கும் செயற்றிட்டத்தினால் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய முன்னேற்றப் பணியின் காரணமாகவே இந்த நீர்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நாளை (04.11) இரவு 7 மணி முதல் மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை 05) காலை 5.00 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.

நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டமையினால் நீர் பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு சபை வருத்தம் தெரிவிப்பதுடன், தேவைக்கேற்ப தண்ணீரை சேமித்து வைக்குமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களுக்கு அறிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!