MilkShakeக்கு பதிலாக சிறுநீரை கெடுத்த நபர் – அமெரிக்காவில் சம்பவம்
அமெரிக்காவில் உள்ள ஒருவர் தான் ஆர்டர் செய்த மில்க் ஷேக்கிற்கு பதிலாக “சிறுநீரை” பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.
உட்டாவைச் சேர்ந்த Caleb Woods என்ற நபர் இந்த வார தொடக்கத்தில் ஆன்லைன் உணவு சேவையின் கீழ் சாண்ட்விச், பிரஞ்சு பொரியல் மற்றும் மில்க்ஷேக் ஆகியவற்றை ஆர்டர் செய்துள்ளார்.
வீட்டில் உணவைப் பெற்ற பிறகு, மில்க் ஷேக் குடிக்க முற்பட்டபோது, தனக்கு கிடைத்தது சிறுநீர் என்பதை கண்டுபிடித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் உணவை கொண்டு வந்த ஓட்டுனரை வூட்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து மணிக்கணக்கில் வேலை செய்வதால், சில நேரங்களில் சிறுநீர் கழிக்க கிண்ணத்தை பயன்படுத்துவதாக சாரதி கூறியுள்ளார். அதன்படி, தூக்கி எறியக்கூடிய பல “கப்கள்” தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார்.
மில்க் ஷேக் தனது தவறினால் சிறுநீர் கழிப்புடன் மாற்றப்பட்டதாகக் கூறிவிட்டு வூட்ஸிடம் மன்னிப்பு கேட்டார்.
இது தொடர்பான சம்பவம் காரணமாக சாரதியும் வாடிக்கையாளரின் பணத்தை திருப்பிக் கொடுக்க முயற்சித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், வூட்ஸ் எதிர்கொள்ளும் நிலைமை குறித்து, சம்பந்தப்பட்ட ஆன்லைன் உணவு சேவை வழங்குநரும் இது குறித்து கவனம் செலுத்தியுள்ளதுடன், சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாகவும் வலியுறுத்தியுள்ளது.
விசாரணை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அந்த நிறுவனத்திற்கு அனுப்பி வைக்குமாறு வூட்ஸிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
“சாரதி தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து, எங்களுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளோம்…” என்றும் நிறுவனம் கூறியுள்ளது.