தற்காப்பு தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு உரிமை இல்லை: ஐ.நாவில் ரஷ்யா கண்டனம்
தடுப்பு தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு எத்தகைய உரிமையும் இல்லை என ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் ரஷ்யா தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் -ஹமாஸ் இடையிலான போர் தாக்குதல் உச்சகட்டத்தில் நடைபெற்று வருகிறது.தங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய பயங்கரவாத அமைப்பான ஹமாஸை முழுவதும் அழிக்க வேண்டும் என்று தெரிவித்து காசா நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில், தற்காப்பு தாக்குதல் நடத்துவது இஸ்ரேலின் உரிமை என்று மேற்கத்திய நாடுகள் பலவும் இஸ்ரேலின் செயலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாட்டு சபையில் நடைபெற்ற 10வது சிறப்பு அவசர கூட்டத்தின் போது பேசிய ஐ.நாவுக்கான ரஷ்யாவின் நிரந்தர உறுப்பினர் நெபென்சியா, இஸ்ரேல் ஒரு ஆக்கிரமிப்பு நாடு எனவே தடுப்பு தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு எந்தவொரு உரிமையும் இல்லை என காட்டமாக தெரிவித்துள்ளார்.