13 இலங்கையர்கள் ரஃபா வாயிலை கடந்துள்ளனர்!
காசா பகுதியில் தங்கியிருந்த 13 இலங்கையர்கள் காசா-எகிப்து எல்லையில் உள்ள ரஃபா வாயிலை கடந்து சென்றுள்ளனர்.
மோதல் காரணமாக காஸா பகுதியில் சிக்கியிருந்த இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
எவ்வாறாயினும், காசாவில் தங்கியுள்ள 17 இலங்கையர்களில் நான்கு பேர் போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கு சிரமப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
அதன்படி எஞ்சிய 13 இலங்கையர்களும் ரஃபா நுழைவாயிலை வந்தடைந்ததாக பாலஸ்தீனத்திற்கான இலங்கைப் பிரதிநிதி பெனட் குரே தெரிவித்தார்.
ரஃபா நுழைவாயிலுக்கும் எகிப்து எல்லைக்கும் இடைப்பட்ட பகுதியில் தான் உள்ளிட்ட இலங்கையர்கள் குழு தற்போது தங்கியிருப்பதாக காஸாவிலிருந்து வெளியேறிய இலங்கைப் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
(Visited 11 times, 1 visits today)





