2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் : நாடாளுமன்றம் வெளியிட்ட அறிவிப்பு
																																		2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான விவாதத்தை 26 நாட்கள் நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 14ஆம் திகதி தொடங்கி நவம்பர் 21ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு நடத்தப்படும்.
அதன்பின், நவம்பர் 22-ம் திகதி தொடங்கி டிசம்பர் 13-ம் திகதி வரை 19 நாட்களுக்கு ஒத்திவைப்பு விவாதம் நடைபெறும்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு டிசம்பர் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் அன்றைய தினம் மாலை 06.00 மணிக்கு இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இந்த காலப்பகுதியில் நாடாளுமன்ற அமர்வுகள் காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடைபெறும்.
        



                        
                            
