உலகம் செய்தி

இஸ்ரேலின் லெபனான் எல்லைக்கு அருகில் இருந்த இலங்கையர்கள் வெளியேற்றம்

இஸ்ரேலின் லெபனான் எல்லைக்கு அருகில் இருந்த இலங்கையர்கள் குழுவொன்று அந்த இடங்களில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

காசா பகுதிக்கு அருகில் உள்ள வீடுகளில் தாதியர் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கையர்களும் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

எனவே, இஸ்ரேலில் இலங்கையர் எவருக்கும் பிரச்சினை இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இஸ்ரேலில் இடம்பெற்று வரும் யுத்த மோதல்களில் விசா இன்றி இருப்பின் அதனை இஸ்ரேலிய தூதரகத்திற்கு தெரிவிக்குமாறு வெளிவிவகார அமைச்சு இஸ்ரேலில் உள்ள மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகத்திற்கு ஏற்கனவே உரிமங்களைப் புதுப்பிக்க 2000 கோரிக்கைகள் வந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த அனுலா ஜயதிலகவின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் மேற்கொள்ளப்படவுள்ளது.

சடலம் இஸ்ரேலில் இருந்து அண்மையில் இந்த நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் அனுலா ஜயதிலகவின் வீட்டிற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தார்.

அதேபோன்று அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

(Visited 10 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி