ஜெர்மனியில் மின்னஞ்சலால் ஏற்பட்ட பரபரப்பு
ஜெர்மனியில் மின்னஞ்சல் ஊடாக அச்சுறுத்தல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது பாடசாலைகளுக்கு மின்னஞ்சல் ஊடாக குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் பல மாநிலங்களில் உள்ள பாடசாலைகளுக்கு குண்டு தாக்குதல் அச்சுறுத்தல் மின்னஞ்சல் ஊடாக தெரிவித்ததாக தெரியவந்து இருக்கின்றது.
குறிப்பாக ஜெர்மனியின் மாநிலங்களான பேர்ளின், பயன் மற்றும் யுரிக்கன் சக்ஸஸ் போன்ற மாநிலங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இவ்வாறு மின்னஞ்சல் மூலமாக குண்டு தாக்குதல் பயமுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்திற்கு கடந்த வாரம் பல நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு மின்னஞ்சல் மூலம் குண்டு தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக முன்ஞ்ஞன்பார்க், கொலோன் புபட்றால், சோலிங்கன், மாள் மற்றும் ஹல்டன் என்று அமைந்து இருக்கின்ற தொழில் கல்விகளை கற்கின்ற பாடசாலைகளுக்கும் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.