இலங்கை செய்தி

திருமண விருந்தொன்றில் கலந்து கொண்ட இளம் யுவதி திடீரென உயிரிழப்பு

திருமண விருந்தொன்றில் கலந்து கொண்ட யுவதியொருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் பிரதேசத்தில் இருந்து செய்தியொன்று பதிவாகி வருகின்றது.

புத்தளம் – ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய எச்.எம்.அயோத்தியா தேஷானி விஜேவர்தன என்பவரே உயிரிழந்துள்ளார்.

திருமண விருந்தில் கலந்து கொண்டு இறைச்சி உள்ளிட்ட பல வகை உணவுகளை சாப்பிட்டு வந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இளைய பிள்ளையான இந்த யுவதி, பாடசாலை நடவடிக்கைகளுக்குப் பின்னர் பல்வேறு சமூகப் பணிகளில் பங்களிப்புச் செய்துள்ளதாக அப்பகுதியிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் நகருக்கு அருகில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் நடைபெற்ற திருமண விருந்தில் இந்த வகை உணவை சாப்பிட்ட யுவதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வாமை ஏற்பட்ட யுவதி சில நிமிடங்களில் ஆபத்தான நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் புத்தளம் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!