அமெரிக்காவில் Apple Watch இறக்குமதிகளுக்குத் தடை?
Apple நிறுவனத்தின் Apple Watch கைக்கடிகாரங்களின் இறக்குமதியைத் தடை செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அனைத்துலக வர்த்தக ஆணையத்தால் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அந்தக் கைக்கடிகாரத்தில் தனக்குச் சொந்தமான ரத்த உயிர்வாயு அளவைக் கண்டறியும் ஒளித் தொழில்நுட்பம் அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக Masimo Corp மருத்துவ நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.
அந்தத் தொழில்நுட்பத்திற்கு Masimo காப்புரிமை பெற்றிருக்கிறது. அதிபர் ஜோ பைடன் தடுக்கவில்லை என்றால் ஆணையத்தின் பரிந்துரை 60 நாள்களில் நடப்புக்கு வரும் என்று Masimo கூறியது.
Apple நிறுவனத்தின் அத்துமீறல் குறித்து அது 2021ஆம் ஆண்டு ஆணையத்திடம் புகார் அளித்தது.
உயிரைக் காக்கக்கூடிய Apple Watch கைக்கடிகாரங்களைப் பல மில்லியன் அமெரிக்கர்கள் பெறுவதைத் தடுப்பதற்காக Masimo அவ்வாறு செய்திருப்பதாய் Apple கூறுகிறது.