கடன் மறுசீரமைப்பின்போது அனைத்து தரப்பினரும் வெளிப்படை தன்மையுடன் நடந்துக்கொள்ள வேண்டும் – ஜுலி சங்!
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவைச் சந்தித்து சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட உடன்படிக்கையைப் பெற்றுக் கொண்டமைக்காக அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததாக அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு இரண்டாவது கடன் தவணையை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடனை மறுசீரமைக்கும் போது அனைத்து கடன் வழங்குபவர்களையும் சமமாக நடத்துவது முக்கியம் என்று அவர் கூறுகிறார்.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றுவது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
(Visited 4 times, 1 visits today)