பிரித்தானியா நோக்கி சென்ற 99 அகதிகளின் பரிதாப நிலை

பிரித்தானியா நோக்கி படகுகளில் பயணித்த 99 அகதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
பா-து-கலே கடற்பிராந்தியத்தியத்தில் இருந்து பிரித்தானியா சென்றவர்களே இந்த நிலைமைக்குள்ளாகியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அன்றைய இரவில் பல்வேறு படகுகளில் அகதிகள் பலர் பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளனர்.
அவர்களை கடற்படையினர் மீட்டு கப்பலில் ஏற்றிக்கொண்டு மீண்டும் கலே கடற்பகுதிக்கு அழைத்து வந்தனர்.
அகதிகள் பயணித்த படகுகளில் இரண்டு மிகுந்த சேதம் அடைந்திருந்ததாகவும், அவர்கள் உயிராபத்தான நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 25 times, 1 visits today)