செய்தி பொழுதுபோக்கு

சந்தோஸ் நாராயணனோடு மீண்டு யாழ்ப்பாணம் வருவேன் – நடிகர் சித்தார்த்

சந்தோஸ் நாராயணனோடு மீண்டு யாழ்ப்பாணம் வருவேன் என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“யாழ் கானம்” இசை நிகழ்ச்சியை முடித்து மீண்டும் சென்னையை நோக்கி பயணத்தை ஆரம்பித்திருக்கின்றோம்.

இந்த நிகழ்வு மறக்கவே முடியாத ஒரு அனுபவம், நான் யாழ்ப்பாணம் வருவது இதுவே முதல்முறை, மகிழ்ச்சியான ஒரு நிகழ்வாக இந்த யாழ் கானத்தை நான் பார்க்கின்றேன்.

உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தமிழ் பாடகர்கள் கலந்து கொண்டு பாடி இருக்கின்றார்கள். எதிர்காலத்திலும் யாழ்ப்பாண மக்களுக்கு இவ்வாறான நிகழ்ச்சிகள் வரும் என்பதை நான் எதிர்பார்க்கின்றேன்.

மீண்டும் அடுத்த முறை சந்திக்கும் வரை தமிழ் சினிமாவை, தமிழ் பாடல்களை எப்போதும் நேசித்துக் கொண்டே இருங்கள். ஏனென்றால் அதுவே எமக்கு மிகுந்த உற்சாகமாக இருக்கும்.

ஒரு பாடகராக இந்த நிகழ்ச்சிக்கு வாய்ப்பு வழங்கிய சந்தோஷ் நாராயணனுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன், இசைக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள், நீங்கள் யாழ்ப்பாணத்தில் எங்கு சென்று கேட்டாலும் நேற்று நடந்த பிரம்மாண்டத்தை பற்றி பேசுவார்கள்.

இந்த பிரமாண்டத்தை சந்தோஷ் நாராயணன் பண்ணி இருக்கின்றார்,அவருக்கு என்னுடைய பெரிய நன்றிகள், அடுத்த தடவை அவர் வரும்போது நானும் அவர் கூட வருவேன் என்கின்ற உறுதியை செலுத்திக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!