கல்பிட்டியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!
																																		கல்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசிரிகம தேவாலயத்திற்கு முன்பாக உள்ள வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
கந்தகுளி, குறிஞ்சம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஆசிரிகம கத்தோலிக்க தேவாலயத்தின் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ளதுடன், இரவு உணவிற்காக தனது மனைவியின் சகோதரர் ஒருவரின் வீட்டிற்கு வந்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், மனைவியின் மற்றொரு சகோதரன் அந்த இடத்திற்கு வந்து தகராறு செய்ததாகவும், அதைத் தீர்க்க முயன்றபோது, அண்ணன் கூரிய ஆயுதத்தால் அவரைக் கொன்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
28 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 7 times, 1 visits today)
                                    
        



                        
                            
