செய்தி விளையாட்டு

CWC – பாகிஸ்தான் அணிக்கு 368 ஓட்டங்கள் இலக்கு

உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் – மிட்செல் மார்ஷ் களமிறங்கினர்.

13 ரன்னில் வார்னருக்கு கேட்ச் செய்யப்பட்டது. முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி பின்னர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர்.

பாகிஸ்தான் பந்து வீச்சை ஓட ஓட விரட்டினர். ருத்ரதாண்டவம் ஆடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இருவரும் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பு இருந்த நிலையில் மார்ஷ் 121 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து வந்த ஸ்மித் 7 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடிய வார்னர் 163 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவர் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பிறந்தது.

அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொதப்பலாக விளையாடினர். இதனால் 400 ரன்கள் குவிக்க வேண்டிய ஆஸ்திரேலியா 367 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 5 விக்கெட்டுகளையும் ஹரிஸ் ரஃப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

(Visited 10 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி