காசா மருத்துவமனை தாக்குதலுக்கு லஸ்தீன போராளிகள் மீது பைடன் குற்றச்சாட்டு
காசாவில் உள்ள அல்-அஹ்லி அரபு மருத்துவமனை மீது நேற்று (18) இரவு நடத்தப்பட்ட தாக்குதல் பலஸ்தீன போராளிகளால் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடந்து இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை வந்தடைந்த அமெரிக்க ஜனாதிபதி, இந்த குண்டுவெடிப்பால் தான் மிகுந்த வருத்தமும் கோபமும் அடைந்ததாகக் கூறினார்.
இத்தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், பலஸ்தீன போராளிகளின் தவறான ராக்கெட் தாக்குதலால் வெடிப்பு ஏற்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.
ஆனால் இந்த தாக்குதல் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் என்று பலஸ்தீன அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த தாக்குதலுக்குப் பிறகு காசா பகுதியில் பொதுமக்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் மீது உலக நாடுகளின் கவனம் குவிந்திருந்த நேரத்தில் அமெரிக்க அதிபரின் இஸ்ரேல் விஜயம் மீது உலக ஊடகங்களின் கண்கள் குவிந்தன.
டெல் அவிவ் நகருக்கு வந்திறங்கிய அமெரிக்க ஜனாதிபதியை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அன்புடன் வரவேற்று, பின்னர் இரு தலைவர்களுக்கும் இடையிலான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.
அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவிடம், “நேற்று காசாவில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட வெடிவிபத்தால் நான் மிகுந்த வருத்தமும் ஆத்திரமும் அடைந்துள்ளேன்” என குறிப்பிட்டார்.
நான் பார்த்தவற்றின் அடிப்படையில், இது மற்ற குழுவால் செய்யப்பட்டது, நீங்கள் அல்ல என்று தோன்றுகிறது. ஆனால் பலர் அதை நம்பவில்லை, எனவே நாம் கடக்க வேண்டியது நிறைய உள்ளது.” எனவும் கூறியருந்தார்.