கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு!

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (17.10) இரவு 8.45 மணியளவில் கந்தளாய் கல்மதியா பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த நபரின் சடலம் அதே புகையிரதத்தில் கந்தளாய் புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
இறந்தவர் பலருடன் சேர்ந்து வயல்களில் வேலை செய்ததாகவும், வேலையை முடித்துவிட்டு ரயில் பாதையில் அமர்ந்து மது அருந்தியபோது குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)