பிரான்ஸில் அதிர்ச்சியை ஏற்படுத்திய குழு மோதல் – சிறுவனுக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் சிறுவன் ஒருவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் 18 வயதுடைய இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
93 ஆம் மாவட்டத்தில் உள்ள Saint-Ouen நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Saint-Ouen நகர்பகுதியில் இளைஞர்களுக்கு இடையே குழு மோதல் ஒன்று வெடித்திருந்தது.
அதன்போது 16 வயதுடைய சிறுவன் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. படுகாயமடைந்த சிறுவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், இந்த மோதல் தொடர்பாகவும், துப்பாக்கிச்சூடு தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், நேற்று வெள்ளிக்கிழமை 18 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர்.
குறித்த நபர் வரும் நவம்பர் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
(Visited 11 times, 1 visits today)